இதுவரை இல்லாத அளவு சிறைக்கைதிகள்.. பாரிய நெருக்கடியில் சிறைச்சாலைகள்!!

1 பங்குனி 2025 சனி 09:09 | பார்வைகள் : 326
பிரான்சில் உள்ள சிறைச்சாலைகள் பாரிய நெருக்கடிகளைச் சந்தித்துள்ளன. இதுவரை இல்லாத அளவு கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இன்று மார்ச் 1, சனிக்கிழமை வெளியான தகவல்களில், பிரான்சில் பெப்ரவரி 1 திகதியின் நிலவரப்படி 81,599 கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரான்சில் தற்போது 62,363 கைதிகளுக்கான இடங்கள் மாத்திரமே உள்ளன. சிறைச்சாலைகள் 130.8% சதவீத அடர்த்தியில் உள்ளன.
குறிப்பாக 18 சிறைச்சாலைகளில் 200% சதவீதத்துக்கும் அதிமான அடர்த்தியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, மிகவும் கவலையளிக்கும் விதமாக 4,490 கைதிகள் இடமின்றி தலையில் மெத்தை விரித்து அதில் படுத்து உறங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக டிசம்பர் 1 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட நிலவரப்படி 80,792 கைதிகள் சிறைவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.