கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது

1 பங்குனி 2025 சனி 09:31 | பார்வைகள் : 211
வெளிநாட்டிலிருந்து இலங்கை சென்ற நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலத்திரனியல் சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் இன்று சனிக்கிழமை (01) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜா - எல பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய வர்த்தகரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கொண்டு வந்த பயணப்பொதியிலிருந்து 10 இலட்சம் ரூபா பெறுமதியான 100 இலத்திரனியல் சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபரான வர்த்தகர் துபாயிலிருந்து இன்றைய தினம் நள்ளிரவு 12.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.