கூலி திரைப்படத்தின் முதல் விமர்சனம்

1 பங்குனி 2025 சனி 10:32 | பார்வைகள் : 190
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் "கூலி" படத்தை 45 நிமிடங்கள் பார்த்துவிட்டேன் என்றும், கண்டிப்பாக இந்த படம் 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்றும் பிரபல நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல், படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் "கூலி". இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் முடியும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், நடிகர் சந்தீப் கிஷான் "கூலி" படத்தின் 45 நிமிட காட்சிகளை பார்த்து விட்டதாகவும், "இந்த படத்தில் நான் நடிக்கவில்லை என்றாலும், லோகேஷ் கனகராஜ் எனது நெருங்கிய நண்பர் என்பதால், அவர் இந்த படத்தின் 45 நிமிட காட்சிகளை எனக்கு காட்டினார்" என்பதும், "படத்தை பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டேன்" என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், "கண்டிப்பாக 1000 கோடி ரூபாய் இந்த படம் வசூல் செய்யும்" என்றும் அவர் தெரிவித்துள்ள இந்த தகவல், ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.