Paristamil Navigation Paristamil advert login

கை கால்கள் இல்லாமல் ஆங்கில கால்வாயை நீந்தி கடந்தவர்!! - நேற்றைய தொடர்ச்சி!!

கை கால்கள் இல்லாமல் ஆங்கில கால்வாயை நீந்தி கடந்தவர்!! - நேற்றைய தொடர்ச்சி!!

8 ஆவணி 2017 செவ்வாய் 11:30 | பார்வைகள் : 18002


இரண்டு கைகளும் இல்லை... இரண்டு கால்களும் இல்லை... சக்கர நாற்காலியில் வாழ்க்கை என்ற போதும்... தன்னம்பிக்கை இம்மியளவும் குறையாமல்.. அதே உத்வேகத்தில் இருந்தார் Philippe Croizon. 
 
தாம் நீச்சல் பழக போவதாக Maritime Gendarmerie இடம் வந்து நின்றார். உற்சாகமான வரவேற்பு கிடைக்க... €12,000 மதிப்பிலான சில உபகரணங்கள் விறு விறுவென தயாரானது. பின்னர் Maritime Gendarmerie அணியுடன் தினமும் நீச்சல் பயிற்சியினை மேற்கொண்டார். வெறித்தனமான இந்த நீச்சல் பயிற்சி ஒவ்வொரு நாளும் ஐந்து மணிநேரங்கள் வரை நீடித்தது. 
 
வாரத்துக்கு 35 மணிநேரங்கள் என இரண்டு வருடங்கள் இடைவிடாத பயிற்சி மேற்கொண்டார். அதன் முடிவில் "பிரான்சில் இருந்து பிரித்தானியா" என்ற சிந்தனையில் வந்து நின்றது. ஆங்கிலக் கால்வாயை கடந்து பிரித்தானிய எல்லையை தொடும் மிக சவாலான முடிவை எடுத்தார். 
 
2010 ஆம் ஆண்டு. செப்டம்பர் 18, சனிக்கிழமை. ஆங்கில கால்வாயை வெற்றிகரமாக வெறும் 14 மணிநேரங்களில் நீந்தி கடந்தார். மொத்த தூரம் 34 கிலோ மீட்டர்கள். காலை 06.45 மணிக்கு பிரித்தானியாவின் Folkestone  இல் நீந்த ஆரம்பித்தவர், இரவு 8.13  மணிக்கு பிரான்சின் Cap Gris Nezat பகுதிக்கு வந்தடைந்தார். 
 
ஊடகங்கள்... தொலைக்காட்சிகள் என அனைத்திலும் இவரின் முகம் தான். இந்த அசாத்திய சாதனையை உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டி தள்ளினார்கள். ஆங்கில கால்வாயை இரண்டு கைகள், கால்கள் இல்லாதவர் நீந்தி கடப்பது இதுவே வரலாற்றில் முதன் முறை என அனைத்து சான்றுகளிலும் பதிவானது. 
 
'பாதி தூரத்தில் வரும்போது மிக வலியாக இருந்தது. ஆனால் என் தன்னம்பிக்கை என்னை கரை சேர்த்தது!' என ஊடகங்களிடம் தெரிவித்தார் Philippe Croizon!!
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்