கூட்டுச் சதியாளர்கள் நீதிமன்றத்தில்..

1 பங்குனி 2025 சனி 10:54 | பார்வைகள் : 649
கடந்த வருடம் மே மாதத்தில், வேறு சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டவேளை, ஆயுதக்பகுழுவை ஏற்பபாடு செய்து காவற்துறையினர் மீது தாக்குதல் நடாத்தி, இரண்டு காவற்துறையினரையும் படுகொலை செய்து, பெரும் போதைப்பொருள் கடத்தல் குற்றவாளி மொஹமத் அம்ரா தப்பித்திருந்தான்.
பின்னர் குற்றத்தடுப்புப் பிரிவின் முயற்சியால் ருமெனியாவில் கைது செய்யப்பட்டிருந்தான்.
சிறையில் இருந்தே செல்பேசி மூலம் இந்தத் தாக்குதலை மொஹமத் அம்ரா செய்திருந்தமை தெரிய வந்துள்ளது.
இந்தக் கூட்டுச் சதி மூலம் இந்தக் குற்றச் செய்யலில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதில் நால்வர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்னர்.
மற்றைய மூவரும் மேலதிக விசாரணைகளிற்காக தற்காலிகமாகத் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.