Val d'Oise : ஒரு வயதுக் குழந்தை - தந்தையின் சடலங்கள் மீட்பு!!
1 பங்குனி 2025 சனி 11:11 | பார்வைகள் : 4320
Val d'Oise மாவட்டத்தில் உள்ள வீடொன்றில் இருந்து ஒரு வயதுக் குழந்தை மற்றும் குழந்தையின் தந்தை ஆகிய இருவரது சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
பெப்ரவரி 28, நேற்று வெள்ளிக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Franconville (Val d'Oise) நகரில் உள்ள வீடொன்றுக்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 42 வயதுடைய தந்தை ஒருவர் அவரது 1 வயதுடைய பெண் குழந்தையினைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களுடைய 10 வயதுடைய மகன் ஒருவரும் சம்பவத்தின் போது இருந்ததாகவும், அவருக்கு உளநல் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


























Bons Plans
Annuaire
Scan