பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல் - 6 பேர் பலி, 20 பேர் காயம் !

1 பங்குனி 2025 சனி 11:25 | பார்வைகள் : 183
பாகிஸ்தானில் மசூதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் ஹைபர் பக்துவா மாகாணத்தில் அகோர கட்டாக்கிலுள்ள தாருல் உலூம் ஹக்கானியா இஸ்லாமிய மதக் கல்லூரியிலுள்ள மசூதியில் குறித்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தானிலுள்ள ஜமியத் உலமா இஸ்லாம் ஸமி என்ற மதசார்பு அரசியல் கட்சியின் தலைவரான ஹமிட் உல் ஹக் என்பரை இலக்குவைத்து வெள்ளிக்கிழமை (28) தொழுகை நிறைவடைந்து சிறிது நேரத்தின் பின்னர் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் 3 பொலிஸார் காயமடைந்துள்ள நிலையில், தாக்குதல் சம்பவத்திற்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லையெனவும் குண்டுவெடிப்பின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் துணை அமைப்பான ஐ.எஸ்.ஐ.எல். உள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.