Paristamil Navigation Paristamil advert login

சூரியனின் ஒளிவெடிப்பை காட்சிப்படுத்திய ஆதித்யா L-1 விண்கலம்

சூரியனின் ஒளிவெடிப்பை காட்சிப்படுத்திய ஆதித்யா L-1 விண்கலம்

1 பங்குனி 2025 சனி 11:29 | பார்வைகள் : 310


சூரியனின் புறவெளியில் நிகழ்ந்த ஒளி வெடிப்பை ஆதித்யா L-1 விண்கலத்தில் உள்ள சூட் கருவி படம் பிடித்து சாதனை படைத்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா L-1 எனும் நவீன விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்  2023 செப்டம்பர் 2ம் திகதி விண்ணில் செலுத்தப்பட்டது.

இது 127 நாட்கள் பயணித்து பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிமீ தொலைவில் உள்ள எல்-1 எனும் லெக்ராஞ்சியன் புள்ளியை மையமாக கொண்ட சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

அங்கிருந்தபடியே சூரியனின் கரோனா, போட்டோஸ்பியர் மற்றும் குரோமோஸ்பியர் பகுதிகளை விண்கலம் ஆய்வு செய்து அரிய தகவல்களை வழங்கி வருகிறது.   

இந்நிலையில், ஆதித்யா விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள சூட் எனும் சாதனம் சூரியனின் வெளி அடுக்குகளில் இதுவரை அறியப்படாத ஒளி வெடிப்பு சிதறலை புகைப்படம், வீடியோ எடுத்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

“ஆதித்யா விண்கலத்தில் உள்ள சோலார் அல்ட்ராவைலட் இமேஜிங் டெலஸ்கோப் எனும் சூட் கருவியானது சூரியனின் போட்டோஸ்பியர் மற்றும் குரோமோஸ்பியரில் இருந்து வெளிவரும் புற ஊதா கதிர்கள் குறித்தும், அதன்மூலம் ஏற்படும் கதிர்வீச்சு மாறுபாடுகள் குறித்தும் ஆய்வுகளை மேற்கொள்ள அனுப்பப்பட்டுள்ளது.

இத்தகைய ஒளி வெடிப்புகள் புவியின் தட்பவெப்ப நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். சூரியனின் கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கு இந்த ஆய்வுகள் உதவும். இதன் மூலம் விண்வெளி ஆய்வில் புதிய சகாப்தம் படைக்கப்பட்டுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்