”மூன்றாம் உலகப்போர் மூண்டால்.. புட்டினே காரணம்!” - ஜனாதிபதி மக்ரோன்!!

1 பங்குனி 2025 சனி 12:26 | பார்வைகள் : 634
மூன்றாம் உலகப்போர் ஒன்று மூண்டால் அதற்கு ரஷ்ய ஜனாதிபதி புட்டினே காரணமாக இருப்பார் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய-உக்ரேன் பிரச்சனையில் அமெரிக்கா முழு மூச்சாக தலையிட்டு வருகிறது. அடுத்தடுத்த சந்திப்புக்களை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டு வருகிறார். அதில் ஒருவராக கடந்த வாரம் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனும் சந்தித்து உரையாடியிருந்தார்.
இந்நிலையில், போர்ச்சுக்கல் தொலைக்காட்சிகளான RTP1 மற்றும் RTP3 ஆகியவற்றுக்கு செவ்வியளித்த ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்,
“"மூன்றாம் உலகப் போரில் ஈடுபடும் ஒரு நபர், அணு ஆயுதங்களைக் கொண்டு நம்மை அச்சுறுத்துவதாக நாம் அனைவரும் கேள்விப்பட்டிருந்தால், அவரை நாம் கீவ்வில் (kyiv) தேடக்கூடாது. நாம் மொஸ்கோவில் பார்க்க வேண்டும்," என தெரிவித்தார். “மூன்றாம் உலகப்போர் மூள காரணமாக ஒருவர் அமைந்தால் அது நிச்சயமாக விளாடிமிர் புட்டினாகத்தான் இருக்க வேண்டும்!” எனவும் அவர் தெரிவித்தார்.