Paristamil Navigation Paristamil advert login

அல்லு அர்ஜுனின் அடுத்த படம் சரித்திரப் படம்?

அல்லு அர்ஜுனின் அடுத்த படம் சரித்திரப் படம்?

1 பங்குனி 2025 சனி 15:16 | பார்வைகள் : 422


'புஷ்பா 2' படம் மூலம் பான் இந்தியா ஸ்டார் என்பதையும் தாண்டி வசூல் ஸ்டார் என்ற பெயரைப் பெற்றார் தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன். அவரது அடுத்த படம் திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கும் படம்தான் என்பது மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

அப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. முன்னணி நடிகர்களின் படங்களை அப்படம் தயாரித்துள்ளது. அந்நிறுவனத்தின தயாரிப்பாளரான நாக வம்சி, சமீபத்திய சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அல்லு அர்ஜுன், திரிவிக்ரம் சீனிவாஸ் படம் பற்றிய அப்டேட்டைக் கொடுத்துள்ளார்.

அப்படம் சமூக - புராணப் படமாக இருக்கும் என்றும், இந்த வருடத்தின் இரண்டாம் பாதியில் படம் ஆரம்பமாகும் என்றும் தெரிவித்துள்ளார். 'புஷ்பா 2' படத்தை விடவும் அந்தப் படத்தை பிரம்மாண்ட எடுக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அல்லு அர்ஜுன், த்ரிவிக்ரம் சீனிவாஸ் கூட்டணி ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் மீண்டும் இணைகிறது.

அட்லியும் அவரது அடுத்த படத்திற்காக அல்லு அர்ஜுனிடம் பேசி வருவதாகத் தகவல் வெளியானது. ஆனால், அப்படம் இப்போதைக்கு ஆரம்பமாவதாகத் தெரியவில்லை.

வர்த்தக‌ விளம்பரங்கள்