கத்தரிக்காய் தொக்கு..

1 பங்குனி 2025 சனி 15:20 | பார்வைகள் : 164
காலை டிபனுக்கும் இரவு டின்னருக்கும் என்ன செய்வது என குழப்பமாகா உள்ளதா? இதோ சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் கத்தரிக்காய் தொக்கு செய்து பாருங்க. ஒருமுறை சாப்பிட்ட பிறகு திரும்ப திரும்ப கேட்பாங்க.
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய்
கடலை எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 1/2 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
பெரிய வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (அரைத்தது)
புளி தண்ணீர் - 1/2 கிளாஸ்
தண்ணீர், உப்பு - தேவையான அளவு
சாம்பார் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
கருப்பட்டி - 1 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:
கத்தரிக்காயை 6 துண்டுகளாக வெட்டி தண்ணீரில் ஊற வைக்கவும்.
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து கடலை எண்ணெய், கடுகு, சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
கத்திரிக்காய் துண்டுகளை சேர்த்து வதக்கி எடுக்கவும்.
அதே எண்ணெய்யில் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி, மஞ்சள் தூள், பச்சை மிளகாய் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
அரைத்த தக்காளி, புளி தண்ணீர், தண்ணீர் சேர்த்து 8 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
உப்பு, சாம்பார் தூள், கருப்பட்டி சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
வதக்கிய கத்தரிக்காயை சேர்த்து கிளறவும்.
நல்லெண்ணெய், கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சுவையான கத்தரிக்காய் தொக்கு தயார்!