கொய்யா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

1 பங்குனி 2025 சனி 15:27 | பார்வைகள் : 297
மக்களின் தற்போதைய வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை பலரின் உடல்நலனில் சாத்தியமான அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. இதை கருத்தில் கொண்டு ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆரோக்கியத்தின் தேவை குறித்து மக்களுக்கு அவ்வப்போது அறிவுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், ஆரோக்கியம் என்று வரும் போது முதலில் நம் நினைவுக்கு வருவது காய்கறிகளும், பழங்களும் தான். இவற்றை சரிசமமாக எடுத்துக்கொள்வது உடல்நலனில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதோடு உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
அந்த வகையில், நாம் தினமும் ஒரு கிண்ணம் நிறைய கொய்யா பழத்தை உட்கொள்வதால் நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்று ஊட்டச்சத்து நிபுணர் விளக்கி உள்ளார்.
கொய்யாப் பழம் வைட்டமின் சி-ன் சிறந்த மூலமாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, கொலாஜன் உற்பத்தியை ஆதரிக்கிறது மற்றும் சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. கொய்யாவில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் மலச்சிக்கலையும் போக்கிறது. அதுமட்டுமின்றி, கொய்யா ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுவதோடு, நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற தேர்வாகவும் இருந்து வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.
கொய்யா பழத்தில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து காரணமாக, தினமும் கொய்யாவை சாப்பிடுவதன் மூலம் உடலின் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு குறைவதால், இதய ஆரோக்கியத்தில் கொய்யா முக்கிய பங்களிக்கிறது. அதே நேரம், கொய்யாவில் கலோரிகள் குறைவாக இருந்தாலும் அவை மிகவும் நிறைவான மனநிலையை தருகிறது மற்றும் எடை மேலாண்மைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் அவர் விளக்கினார்.