Paristamil Navigation Paristamil advert login

Sevran : காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க - 14 ஆவது தளத்தில் இருந்து குதித்த நபர்..!!

Sevran : காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க - 14 ஆவது தளத்தில் இருந்து குதித்த நபர்..!!

1 பங்குனி 2025 சனி 18:05 | பார்வைகள் : 1459


காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்கும் நோக்கில் நபர் ஒருவர் 14 ஆவது தளத்தில் இருந்து குதித்துள்ளார்.

இச்சம்பவம் மார்ச் 1, இன்று சனிக்கிழமை காலை Sevran (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் காவல்துறையினர் திடீர் தேடுதல் மேற்கொண்டனர். அதன் போது காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்கும் நோக்கில் நபர் ஒருவர் ஜன்னல் வழியாக வெளியே பாய்ந்துள்ளார்.

படுகாயமடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் வழக்கு ஒன்றை விசாரித்து வரும் SDPJ 92 காவல்துறையினர் ( Hauts-de-Seine) , மேற்படி தேடுதல் வேட்டையை Sevran நகரில் மேற்கொண்டிருந்தனர். அதை அடுத்தே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது,.

விசாரணைகளை பொபினி வழக்கறிஞர் அலுவலகம் மேற்கொண்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்