Paristamil Navigation Paristamil advert login

2024 ஆம் ஆண்டில் 410,000 மின்னல் தாக்குதல்கள் பதிவு!!

2024 ஆம் ஆண்டில் 410,000 மின்னல் தாக்குதல்கள் பதிவு!!

1 பங்குனி 2025 சனி 18:38 | பார்வைகள் : 725


சென்ற 2024 ஆம் ஆண்டில் பிரான்சில் 410,000 மின்னல் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக தென்மேற்கு மற்றும் வடகிழக்கு மாவட்டங்களில் அதிகூடிய மின்னல் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.

வானிலை அவதானிப்பு மையமான Météo-France இத்தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி பிரான்சில் சென்ற ஆண்டு 410,000 மின்னல் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன எனவும், எவ்வாறாயினும் இது முந்தைய எண்ணிக்கைகளை முறியடிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Arles (Bouches-du-Rhône) நகரமானது அதிகூடிய மின்னல் தாக்குதல்களுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு சென்ற ஆண்டில் 26 நாட்களில் 489 மின்னல்தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.

சென்ற வருடம் அதிகூடிய மின்னல் தாக்குதல்கள் பதிவான முதல் 10 மாவட்டங்கள் இவையாகும்.

Haute-Marne: 2,103
Haute-Saône: 1,614
Côte-d'Or: 1,493
Vosges: 1,485
Seine-et-Marne: 1,483
Upper Corsica: 1,438
Var: 1,316
Loire: 1,299
Dawn: 1,276
Alpes-Maritimes: 1,252

வர்த்தக‌ விளம்பரங்கள்