வெள்ளை மாளிகையில் கலவரம்.. அமைதி காக்கும் படி ஜனாதிபதி மக்ரோன் அழைப்பு!!

2 பங்குனி 2025 ஞாயிறு 09:00 | பார்வைகள் : 1916
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் அவரது உக்ரேனின் சகபாடியான செலன்ஸிக்கும் இடையே இடம்பெற்ற காரசாரமான பேச்சுவார்த்தையை அடுத்து, பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அமைதி காக்கும்படி அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியாகியுள்ள La Tribune பத்திரிகைக்கு அவர் வழங்கிய செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ”கோபத்திற்கு அப்பால், அனைவரும் அமைதி, மரியாதை மற்றும் அங்கீகாரத்திற்குத் திரும்ப வேண்டும் என்று நான் நினைக்கிறேன், இதனால் நாம் உறுதியாக முன்னேற முடியும், ஏனென்றால் தற்போது எழுந்துள்ள ஆபத்து - மிகவும் முக்கியமானது," என அவர் தெரிவித்தார்.
ட்ரம்ப் மற்றும் செலன்ஸிக்கு இடையே இடம்பெற்ற விவாதத்தின் போது அமெரிக்க தரப்பி செலன்ஸிக்கு போதிய அங்கீகாரம் வழங்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்க முறைதவறி நடந்துகொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்க செலன்ஸியை பேச்சுவார்த்தைக்கு அழைத்து அவமரியாதை செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
"இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மூலோபாய ரீதியாகவும், ரகசியமாகவும் விவாதம் நடத்துவது நல்லது" எனவும் ஜனாதிபதி மக்ரோன் தெளிவுபடுத்தினார்.