Paristamil Navigation Paristamil advert login

L'Équipe - விளையாட்டுச் செய்திகளின் ராஜா!!

L'Équipe - விளையாட்டுச் செய்திகளின் ராஜா!!

4 ஆவணி 2017 வெள்ளி 11:30 | பார்வைகள் : 18188


உங்கள் கண்களில் அடிக்கடி தென்படும் பத்திரிகை தான் இது, விளையாட்டுச் செய்திகளுக்கென பிரத்யேகமாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டு வரப்படுகிறது. 
 
Le Parisien பத்திரிகையின் சகோதரி பத்திரிகை தான் இந்த L'Équipe. என்றால் 'குழு' (விளையாட்டுக்குழு) என அர்த்தம். Éditions Philippe Amaury பத்திரிகையை அச்சிட்டு வெளியிட்டு வருகிறது. 
 
உதைப்பந்தாட்டம், ருக்ஃபி, உந்துருளி போட்டிகள், துவிச்சக்கர வண்டி போட்டிகள் என விளையாட்டு செய்திகளின் பிதாமகன். ஒரே பத்திரிகையில் அனஒத்து விளையாட்டுச் செய்திகளையும் அறிய முடியும். 
 
இப்பத்திரிகை முன்னர் வெவ்வேறு பெயர்களில் வெளிவந்ததாக பல கிளை கதைகள் இருந்தாலும், உத்தியோகபூர்வமாக வாரத்தில் மூன்று இதழ்கள் என 1946 ஆம் ஆண்டில் இருந்து வெளிவரத்தொடங்கியது. இரு வருடங்களின் பின்னர், 1948 ஆம் ஆண்டில் இருந்து அது தினசரி நாளேடானது. முதல் இதழ் பெப்ரவரி 28 ஆம் திகதி 1946 ஆம் ஆண்டு வெளியானது. 
 
பத்திரிகை ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு குறிப்பிடத்தக்க வளர்ச்சிகளை கண்டது. 1998 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31 ஆம் திகதி L'Équipe தொலைக்காட்சி உதயமானது. 
 
அன்று ஜூலை 13, 1998 ஆம் ஆண்டு.  அன்று வெளியான இப்பத்திரிகை 1,645,907 பிரதிகளை விற்று அசுர சாதனை புரிந்தது. ஒரு விளையாட்டுப் பத்திரிகை இத்தனை பிரதிகள் விற்றது வரலாற்றில் அதுவே முதன் முறை!! அதற்கு முந்தைய நாளில் உலகக்கோப்பை உதைப்பந்தாட்ட  போட்டியில் பிரெஞ்சு அணி அபார வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 
 
நாட்டின் சகல மூலைகளிலும் விற்பனையில் இருக்கும் இப்பத்திரிகை விளையாட்டுப் பிரியர்களின் ராஜா என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்