அரச வங்கிகளில் கொள்ளையிடப்படும் மக்களின் பணம்

2 பங்குனி 2025 ஞாயிறு 05:48 | பார்வைகள் : 2831
இலங்கையில் அரசாங்க வங்கிகளில் மக்களின் பணம் கொள்ளையிடப்படுவதாக அம்பிட்டியே சுமனரதன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தம் வங்கியில் வாய்ப்புச் செய்த பணம் களவாடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகிய அரச வங்கிகளில் அப்பாவி பொதுமக்களின் பணம் கொள்ளையிடப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்வாறு பணம் கொள்ளை இடப்படுவது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை என அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.
மட்டக்களப்பு மக்கள் வங்கியை கிளைக்குள் அவர் இந்த குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.
வங்கிகளின் பிரதானிகள், வைப்பிலிட்ட பணம் களவாடப்படும் நடவடிக்கைகளை தடுக்க தவறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமது வங்கியில் தனது வங்கி கணக்கில் வைப்புச் செய்த பணம் எவ்வாறு வேறு ஒரு வங்கியின் வைப்பாளரது கணக்கில் வைப்பிலிடப்பட்டது என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.