Paristamil Navigation Paristamil advert login

சச்சினின் இந்தியா மாஸ்டர்ஸ் அபார வெற்றி

சச்சினின் இந்தியா மாஸ்டர்ஸ் அபார வெற்றி

2 பங்குனி 2025 ஞாயிறு 06:42 | பார்வைகள் : 136


சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிக்காவை வீழ்த்தியது.

வதோதராவில் நடந்த இப்போட்டியில் தென்னாப்பிரிக்கா மாஸ்டர்ஸ் முதலில் துடுப்பாடியது. ராகுல் ஷர்மாவின் மிரட்டலான பந்துவீச்சில் ஆம்லா (9), கல்லிஸ் (0), ருடோல்ப் (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய வீரர்களை யுவ்ராஜ் சிங், பின்னி, நேகி வெளியேற்ற தென்னாப்பிரிக்கா 85 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக ஹென்றி டேவிட்ஸ் 38 (28) ஓட்டங்களும், டேன் விலாஸ் 21 (15) ஓட்டங்களும் எடுத்தனர். யுவ்ராஜ் சிங், ராகுல் ஷர்மா தலா 3 விக்கெட்டுகளும், பின்னி, நேகி தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

அடுத்து களமிறங்கிய இந்தியா மாஸ்டர்ஸ் 2 விக்கெட்டுக்கு 89 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. அம்பத்தி ராயுடு 41 ஓட்டங்களும், பவன் நேகி 21 ஓட்டங்களும் எடுத்தனர்.   

 

வர்த்தக‌ விளம்பரங்கள்