மூன்றாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ள Infinix

2 பங்குனி 2025 ஞாயிறு 06:52 | பார்வைகள் : 197
Infinix நிறுவனம் tri-fold Zero Series Mini ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
Infinix நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய Zero Flip ஸ்மார்ட்போனை 2024 நவம்பரில் அறிமுகப்படுத்திய நிலையில், இப்போது அதன் முதல் மூன்று மடிப்பு (Tri-Fold) Zero Series Mini ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.
இது Mobile World Congress (MWC) 2025 நிகழ்விற்கு முன்பாக (மார்ச் 3 - 6) அறிவிக்கப்பட்டுள்ளது.
Zero Series Mini - புதிய தொழில்நுட்பம்
இந்த Zero Series Mini மாடல் மூன்று மடிப்பு வடிவமைப்பு கொண்டதாக இருக்கும்.
இதில் Dual Display அனுபவம் வழங்கப்பட்டுள்ளதால், வாசிப்பதற்கும் மொழிபெயர்ப்பு செய்திகளை ஒரே நேரத்தில் பார்க்கவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
- முன்புறம் punch-hole Camera மற்றும் பின்புறம் இரட்டை கமெரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
- ஜிம் உபகரணங்கள், சைக்கிள் ஹேண்டில் மற்றும் கார் டாஷ்போர்டில் பொருத்தக்கூடிய special strap கூடுதல் accessories-ஆக வாழப்படுகிறது.
- பையில் தொங்க விடுவதற்கும் வசதியாக இந்த special strap வடிவமைக்கப்பட்டுள்ளது.
MWC 2025 நிகழ்வில் Infinix தனது Zero Series Mini பற்றிய முழு விவரங்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.