Seine-Saint-Denis : நகரசபை உறுப்பினர் மீது தாக்குதல்.. மகிழுந்து எரிப்பு!!

2 பங்குனி 2025 ஞாயிறு 10:00 | பார்வைகள் : 2265
Seine-Saint-Denis நகரசபை உறுப்பினர் Faouzy Guellil தாக்கப்பட்டு, அவரது மகிழுந்து எரியூட்டப்பட்டுள்ளது. பெப்ரவரி 28, வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Stains நகரில் உள்ள அவரது வீட்டின் முன்பாக இரவு 9 மணி அளவில் சுற்றிவளைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். சம்பவத்தின் போது அவரது மனைவியும், குழந்தைகளும் உடன் இருந்ததாகவும், அவர்கள் உடனடியாக காவல்துறையினரை அழைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு, சமூகவிரோதிகள் அவரது மகிழுந்தினையும் எரியூட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
”ஏற்றுக்கொள்ள முடியாத தாக்குதல்!” இது என பல்வேறு அரசியல் தலைவர்கள் இந்த தாக்குதலுக்கு எதிராக தங்களது கண்டன குரலை எழுப்பியுள்ளனர்.