இளையோர் மத்தியில் ஆபத்து புதிய தடுப்பூசி பிரச்சாரம் ஆரம்பம்.

2 பங்குனி 2025 ஞாயிறு 07:27 | பார்வைகள் : 5837
மூளைக் காய்ச்சல் நோய் அண்மைக்காலமாக இளையோர் மத்தியில் மிகவும் அதிகமாக பரவிவருவதாக 'Agence régionale de santé' பிராந்திய சுகாதார நிறுவனம் (ARS) தனது அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. Rennes பகுதியில் ஒரு இளைஞன் மூளைக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளான்.
இதனையடுத்து பிராந்திய சுகாதார நிறுவனம் (ARS) Rennes பகுதியில் முதல் கட்டமாக பெருமளவிலான தடுப்பூசி பிரச்சாரத்தை நாளை திங்கட்கிழமை 03/03 முன்னெடுக்கவுள்ளது. 15 வயது முதல் 24 வயது வரையான அனைத்து இளையோரையும் குறிவைத்து இந்த பிரச்சாரம் நடக்கவுள்ளது.
இதற்காக சுமார் 100,000 மூளைக்காய்ச்சலை தடுக்கும் தடுப்பூசிகள் Rennes பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. நாளைமுதல் மருந்தகங்கள், தாதியர்கள் நிலையங்கள், மருத்துவமனைகள், போன்ற இடங்களிலும், விசேட கூடாரங்கள் அமைத்து பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், பல்பொருள் அங்காடிகள் பேன்றவற்றின் அருகாமையிலும் இளையோருக்கு இலவச சேவைகள் நடாத்தப்படவுள்ளது.
இளையோர் விழிப்புணர்வுடன் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க வருமாறு Agence régionale de santé' பிராந்திய சுகாதார நிறுவனம் (ARS) அழைப்பு விடுத்துள்ளது, வரும் நாட்களில் நாடுமுழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படும் எனவும் அறியமுடிகிறது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1