அசோக் செல்வன் ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்?

2 பங்குனி 2025 ஞாயிறு 12:08 | பார்வைகள் : 189
தமிழ் திரை உலகின் இளம் நடிகரான அசோக் செல்வன் ஜோடியாக, கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிறுவனம் ஏற்கனவே ’குட் நைட்’ மற்றும் ’லவ்வர்’ ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை தயாரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பில் தான் அசோக் செல்வன் – கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.