Paristamil Navigation Paristamil advert login

Le Bourget விமானநிலையம் - சில தகவல்கள்!!

Le Bourget விமானநிலையம் - சில தகவல்கள்!!

2 ஆவணி 2017 புதன் 10:30 | பார்வைகள் : 18973


பரிசின் புறநகரில் உள்ள Dugny மற்றும் Gonesse இரு நகரங்களை இணைத்துக்கொண்டு அமைந்துள்ளது இந்த Le Bourget விமானநிலையம்.
 
1932 ஆம் ஆண்டு ஓர்லி சர்வதேச விமானநிலையம் கட்டும் வரை, இந்த விமான நிலையம் தான் மிகப்பெரும் சேவைகளை ஆற்றி வந்தது. 1919 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த விமான நிலையம் இன்று 'சில' தேவைகளுக்காக மாத்திரமே இயங்கி வருகிறது. சாள்-து-கோல் மற்றும் ஓர்லி விமான நிலையங்களை தெரிந்த பலருக்கு இந்த விமான நிலையம் குறித்து அவ்வளவாக தெரியாது. 
 
சில தனிப்பட்ட பயணங்கள், முக்கிய பிரமுகர்களின் வருகை, விமான கண்காட்சிகள் என தன் சேவையை வழங்கி வருகிறது இந்த விமான நிலையம். 
 
சர்வதிகாரி அடோப் ஹிட்லர் பரிசுக்கு ஒரே ஒரு தடவை வந்தார். ஜூன் 25, 1940 ஆம் ஆண்டு. அவர் வந்து இறங்கியது இந்த விமான நிலையத்தில் தான். 
 
1977 ஆம் ஆண்டு சர்வதேச சேவைகள் அனைத்தையும் நிறுத்திக்கொண்டது Le Bourget. பின்னர் 1980 ஆம் ஆண்டு உள்நாட்டு சேவைகளையும் நிறுத்திக் கொண்டது. ஆனால், வியாபார விமான சேவை, தனிநபர் விமான சேவைகள் அனைத்தையும் தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. 
 
1975 ஆம் ஆண்டில் Musée de l’air et de l’espace, இந்த விமான நிலையத்தை ஒரு விமான அருங்காட்சியகமாக வடிவமைத்தது. விமானம் தொடர்பான அனைத்து பொக்கிஷங்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருதன. 
 
அவ்வப்போது சில விமான விபத்துக்களுக்கும் முகம் கொடுத்தது இந்த விமான நிலையம். 1948  ஆம் ஆண்டு எயார் பிரான்சின் விமானம் ஒன்றும், 1952 ஆம் ஆண்டும் சிறு விபத்துக்கள் இடம்பெற்றன. 
 
குறிப்பாக, 1973 ஆம் ஆண்டு இடம்பெற்ற விமான சாகச கண்காட்சியின் போது சூப்பர் சோனிக் Tupolev Tu-144 விமானம் விபத்துக்குள்ளானது. 
 
Charles de Gaulle விமானநிலையம்.. அருகே.. 12 கிலோ மீட்டர்கள் தூரத்தில் உள்ளது என்பதும் ஒரு முக்கியமான விடயம்!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்