மட்டன் கறிதோசை..

2 பங்குனி 2025 ஞாயிறு 12:14 | பார்வைகள் : 134
மட்டன் கறி தோசை என்றாலே சுவை அள்ளும். மட்டன் கறி தோசை அனைவருக்கும் பிடித்த உணவாகவும் உள்ளது. மட்டன் ஸ்டைலில் வீட்டிலேயே சுவையாகவும் காரசாரமாகவும் செய்வது குறித்து இப்போது தெரிந்துகொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய்
வெங்காயம்
பச்சை மிளகாய்
கறிவேப்பிலை
இஞ்சி பூண்டு பேஸ்ட்
தக்காளி
கல் உப்பு
மிளகாய் தூள்
மல்லித் தூள்
சீரகத் தூள்
மஞ்சள் தூள்
மிளகுத் தூள்
மட்டன் கொத்துக்கறி
கரம் மசாலா
கொத்தமல்லி
முட்டை
தோசை மாவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கவும்.
பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் , நறுக்கிய தக்காளி மற்றும் கல் உப்பு சேர்த்து தக்காளியை நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், மிளகுத் தூள் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசம் நீங்கும் வரை வதங்கவும். இதையடுத்து மட்டன் கறியை போட்டு 5 நிமிடங்கள் வரையில் நன்றாக வதக்கி வேக வைக்கவும். நன்கு வெந்ததும் கரம் மசாலா மற்றும் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், கொத்துக்கறி மசாலா தயார்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். அதனையடுத்து தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, தடிமனாக மாவு ஊற்றி கொள்ள வேண்டும்.
பின்னர் அதன் மேல் முட்டையை ஊற்றி, பின் கறி மசாலாவை பரப்பி, எண்ணெய் ஊற்றி, தோசைக்கரண்டியால் மசாலாவை அழுத்திவிட்டு, பின் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுத்தால் சுவையான மட்டன் கறி தோசை தயார்.