மாநாடு : லண்டன் சென்றடைந்தார் ஜனாதிபதி மக்ரோன்!!

2 பங்குனி 2025 ஞாயிறு 14:34 | பார்வைகள் : 1428
ஐரோப்பிய தலைவர்களுக்கான மாநாடு இன்னும் சில நிமிடங்களில் ஆரம்பிக்கப்பட உள்ளது. இந்த மாநாடில் கலந்துகொள்ள ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் லண்டன் பயணமாகியுள்ளார்.
சற்று முன்னர் இலண்டனுக்கு சென்றடைந்தார். அவரை பிரித்தானியாவின் பிரதமர் கியஸ் ஸ்ராமர் வரவேற்றார். சந்திப்புக்கு முன்னதாக இருவரும் சில நிமிடங்கள் கலந்துரையாடினர்.
கிட்டத்தட்ட 15 நாடுகளின் ஜனாதிபதிகளின், பிரதமர்கள் என பல முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். முன்னதாக, வெள்ளிக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரேன் ஜனாதிபதி விளாடிமிர் செலன்ஸி இருவரும் சந்தித்து உரையாடியிருந்தார். மிகவும் காரசாரமாக இடம்பெற்ற இந்த விவாதத்தை அடுத்து, இந்த சந்திப்பு மிக முக்கியமானதாக அமைகிறது. செலன்ஸ்கியும் சற்று முன்னர் லண்டனை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.