பொலிவியாவில் பயங்கர விபத்து…. 37 பேர் பலி

2 பங்குனி 2025 ஞாயிறு 15:36 | பார்வைகள் : 340
பொலிவியாவில் மதுபோதையில் சாரதி பேருந்தை இயக்கியதால் ஏற்பட்ட விபத்தில் 37 பேர் பலியாகினர்.
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் உள்ள ஆரூரோ பகுதியில் திருவிழா நடந்து வருகிறது.
இதில் பங்கேற்க சிலர் பேருந்துகளில் புறப்பட்டனர். உயுனி மற்றும் கொல்சானி இடத்திற்கு இடையே ஒரு பேருந்து சென்றபோது, எதிர்திசையில் உள்ள சாலையில் விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் 37 பேர் உயிரிழந்ததாகவும், 39 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் 4 மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணில் விபத்திற்குள்ள பேருந்தை இயக்கிய சாரதி மது அருந்தியிருந்ததாக தெரிய வந்துள்ளது.