Paristamil Navigation Paristamil advert login

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்காக ஏற்படும் மாற்றம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்காக ஏற்படும் மாற்றம்

2 பங்குனி 2025 ஞாயிறு 16:00 | பார்வைகள் : 2775


கட்டுநாயக்க விமான நிலையத்தின் முனையச் செயல்பாட்டுப் பிரிவில் பேருந்துகள் மற்றும் விமானங்களை அணுகப் பயன்படுத்தப்படும் ஏணிகள் மிகவும் பழமையானவை என்று தெரிவிக்கப்படுகிறது. 
 
அதன்படி, பேருந்துகள் சுமார் 33 ஆண்டுகள் பழமையானவை என்றும், ஏணிகள் சுமார் 30 ஆண்டுகள் பழமையானவை என்றும் கூறப்படுகிறது. 
 
இதன் காரணமாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய பேருந்துகள் மற்றும் ஏணிகளை கொள்வனவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் புதிய நிர்வாக அதிகாரி தலைமையில் குறித்த முடிவுகள் எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்