Choisy-le-Roi : கத்திக்குத்து தாக்குதலில் பெண் பலி.. கணவர் கைது!!

2 பங்குனி 2025 ஞாயிறு 18:30 | பார்வைகள் : 1467
வீதியில் வைத்து பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இக்கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய அப்பெண்ணின் கணவர் மற்றும் அவரது மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Choisy-le-Roi (Val-de-Marne) நகரில் இச்சம்பவம் நேற்று மார்ச் 1, சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. அங்குள்ள rue Jules-Ferry வீதியில் வைத்து இரவு 8 மணி அளவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கத்தி ஒன்றினால் தாக்கப்பட்டதில் 60 வயதுடைய பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த SDPJ 94 பிரிவு காவல்துறையினர், கொல்லப்பட்ட பெண்ணின் கணவரை முதல் குற்றவாளியாக அடையாளம் கண்டு அவரைக் கைது செய்தனர். பின்னர் அவரது மகனும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கபடுகிறது.