■ நிரந்தரமாக சேவை நிறுத்தப்படும் Orlybus பேருந்துகள்!!

2 பங்குனி 2025 ஞாயிறு 18:42 | பார்வைகள் : 1532
பரிசில் இருந்து ஓர்லி விமான நிலையத்துக்கு பயணிக்கும் Orlybus பேருந்துகள் இன்று மார்ச் 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையுடன் நிரந்தரமாக நிறுத்தப்படுகிறது.
குறித்த பேருந்து சேவைகளை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளதை அடுத்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. குறிப்பாக 14 ஆம் இலக்க மெற்றோ ஓர்லி விமான நிலையம் வரை விஸ்தரிக்கப்பட்டதை அடுத்து பயணிகள் மெற்றோவினையே அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
இதனால் 62 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்த இந்த பேருந்து சேவைகள் இன்றுடன் நிரந்தரமாக நிறுத்தப்படுகின்றன.
14 ஆம் இலக்க மெற்றோவினைப் பயன்படுத்தில் ஓர்லி விமான நிலையத்துக்கு நாள் ஒன்றுக்கு 20,000 பயணிகள் வந்தடைகின்றனர். அதேவேளை குறித்த தானியங்கி சேவையான 14 ஆம் இலக்க மெற்றோ மொத்தமாக நாள் ஒன்றுக்கு 900,000 பயணிகளை சுமக்கிறது. அத்துடன் பரிஸ் மெற்றோ சேவைகளில் நீண்ட தூரம் பயணிக்கும் சேவையாகவும் இது இருக்கிறது.