பிரெஞ்சு வங்கிகளின் செயலாக்க கட்டண சர்ச்சை!!
1 ஆவணி 2017 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 18891
கடந்த 2010 ஆம் ஆண்டு பிரெஞ்சு வங்கிகள் மீது பெரும் சர்ச்சை எழுந்தது. வங்கிகள் செயலாக்க கட்டணமாக ( processing fee) அதிகளவு பணத்தை அறவிடுகிறது என்பதே அந்த சர்ச்சை. இதை விசாரித்த Autorité de la concurrence நிறுவனம், 'இது பகல் கொள்ளை! செயலாக்க கட்டணம் எனும் பெயரில் இடம்பெறும் பகல் கொள்ளை!!' என தடாலடியாக அறிவித்தது.
'இது கட்டணம்.. இத கட்டணும்' என்ற கொள்கையில் இயங்கிய 11 வங்கிகள் மீது சட்டம் பாய்ந்தது. தொடர்ச்சியாக இடம்பெற்ற விசாரணைகளில் குறித்த 11 வங்கிகளுக்கும் சேர்ந்து மொத்தம் 384,900,000 யூரோக்களை குற்றப்பணமாக விதித்தது. மறுநாள் பத்திரிகைகளில் மேற்கண்ட 9 எண்கள் கொண்ட பெரும் தொகை, தலைப்புச் செய்தியானது.
இந்த 11 வங்கிகளில், பல முக்கிய வங்கிகள் ஏகபோகமாய் சிக்கிக் கொண்டன. தபாலகத்தின் ( La poste ) ஒரு பகுதியான La Banque postale வங்கியும் சிக்கிக்கொண்டது. சோகம் என்னவெனில்.. அது கடந்த 2006 ஆம் ஆண்டு தான் வங்கிசேவையினை ஆரம்பித்திருந்தது. Société Générale, HSBC உள்ளிட்ட பல முக்கிய வங்கிகள் மீது தண்டப்பணம் விதிக்கப்பட்டது.
வங்கிச் சேவைகளில் இரு நூற்றாண்டுகளை (1800 ஆம் ஆண்டு முதல்..) கடந்த Banque de France வங்கியும் இந்த சர்ச்சையில் சிக்கி சிதறியது. 'காசோலை மாற்றுவதற்கு அதிகளவு கட்டணம்' விதிக்கப்பட்டமையே பிரதான குற்றம் என தெரிவிக்கபப்ட்டிருதது.