பிரெஞ்சுப் பாடகர் Herbert Leonard மரணம்!!

3 பங்குனி 2025 திங்கள் 07:00 | பார்வைகள் : 561
பிரெஞ்சுப் பாடகர் Herbert Leonard , தனது 80 ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.
நுரையீரல் புற்றுநோய் காரணமாக Fontainebleau நகர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மார்ச் 2 ஆம் திகதி அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். Strasbourg நகரில் 1945 ஆம் ஆண்டு பெப்ரவரி 25 ஆம் திகதி பிறந்த அவர், பிரெஞ்சு இசைத்துறையில் 80 ஆம் ஆண்டுகளில் கொடிகட்டிப் பறந்தார்.
குறிப்பாக அவர் இசையமைத்து பாடிய Pour le plaisir மிக பிரபலமான பாடலாகும். அதேபோல் அவரது Questions pour un champion பாடல் 2.5 மில்லியனுக்கும் அதிகமாக விற்பனையானது.
கடந்த வருடங்களில் தொடர்ச்சியாக உடல்நலக்குறைவுக்குள்ளாகியிருந்த அவர், இறுதியாக கடந்தவாரம் நுரையீரல் புற்றுநோயின் தீவிரம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.