Paristamil Navigation Paristamil advert login

ஜிவி பிரகாஷ் மீண்டும் நடிகராக வெற்றியைப் பதிப்பாரா ?

ஜிவி பிரகாஷ் மீண்டும் நடிகராக  வெற்றியைப் பதிப்பாரா ?

3 பங்குனி 2025 திங்கள் 06:56 | பார்வைகள் : 2354


இசையமைப்பாளர் மற்றும் நடிகராக இருக்கும் ஜிவி பிரகாஷ்குமார், 'கிங்ஸ்டன்' படம் மூலம் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். இசையமைப்பாளராக தொடர்ந்து தனி முத்திரையைப் பதித்து வரும் ஜி.வி.,க்கு நடிகராக தொடர் வெற்றி கிடைக்காமல் இருக்கிறது.

கதாநாயகனாக அவர் நடித்து கடைசியாக வெற்றி பெற்ற படம் 2021ல் வெளிவந்த 'பேச்சுலர்'. அந்தப் படத்திற்குப் பிறகு அவர் நடித்த “ஜெயில், செல்பி, ஐங்கரன், அடியே, ரெபல், கள்வன், டியர்' ஆகிய படங்கள் வரவேற்பைப் பெறவில்லை. கடந்த ஆண்டில் மூன்று படங்களில் நடித்தும் ஒன்று கூட வெற்றி பெறாமல் போனது.

இந்த ஆண்டில் அவரது நடிப்பில் முதல் படமாக 'கிங்ஸ்டன்' படம் இந்த வாரம் மார்ச் 7ம் தேதி வெளியாகிறது. 'பேச்சுலர்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமான திவ்யபாரதி இப்படத்தில் மீண்டும் ஜிவி-யுடன் ஜோடி சேர்ந்துள்ளார். அந்த ராசியான கூட்டணி மீண்டும் இதில் வெற்றிகரமாக அமைந்து தயாரிப்பாளராகவும் ஜிவியை வெற்றி பெற வைக்கட்டும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்