Paristamil Navigation Paristamil advert login

Impétueux - ஒரு கப்பலின் கதை!!

Impétueux - ஒரு கப்பலின் கதை!!

31 ஆடி 2017 திங்கள் 17:30 | பார்வைகள் : 19134


பிரெஞ்சு வரலாற்றில் சில நூற்றாண்டுகளுக்கு முன்னேயான பக்கங்களை புரட்டினால்.., பல யுத்தங்களும்.. யுத்தக்கப்பல்களுக்குமான கதைகள் நிரவி இருக்கும். இன்று Impétueux எனும் ஒரு கப்பலின் கதையை பார்க்கலாம்!!
 
1757 ஆம் ஆண்டு அது. அமெரிக்க புரட்சி (American Revolutionary ) யுத்தத்தில் பிரான்ஸ் பங்கெடுத்தது. அதன் போது Impétueux கப்பல் பயன்படுத்தப்பட்டது. கப்பலின் அனைத்து பக்கங்களிலும் துப்பாக்கி முனை நீட்டிக்கொண்டிருக்கும் முற்றுமுழுதான போர்க்கப்பல். மொத்தமாக 90 துப்பாக்கிகள் இதுபோல் பொருத்தப்பட்டிருந்தது. இந்த யுத்தத்தில் ஈடுபட்டு சில பாகங்களை இழந்தாலும்.. கப்பல் அந்த யுத்தத்தை முடித்துக்கொண்டு, வேறு சில யுத்தங்களுக்கு தயாரானது. 
 
அமெரிக்க, ஐரோப்ப, ஆபிரிக்க மற்றும் ஆசிய கண்டங்களுக்கிடையே Seven Years' War எனும் ஏழுவருட யுத்தம் இடம்பெற்றது. இந்த யுத்தத்திலும் பிரெஞ்சு ஈடுபட, மேற்கண்ட Impétueux கப்பல் தன் கடமையைச் செய்தது. 
 
அமெரிக்கப் புரட்சியின் ஒரு பகுதியான Battle of Ushant (1778) எனும் யுத்தத்திலும் பங்கேற்றது குறித்த கப்பல். இந்த யுத்தத்துக்காக மேலதிகமாக 14 துப்பாக்கிகள் பொருத்தப்பட்டு, மொத்தமாக 104 துப்பாக்கிகள் பொருத்தப்பட்டன. 
 
இந்த கப்பல் தனது பெயரை 1762 ஆம் ஆண்டு Ville de Paris என மாற்றிக்கொண்டது. அமெரிக்க புரட்சியின் மற்றுமொரு பகுதி Battle of the Saintes!! இதிலும் Impétueux பங்கெடுத்தது. 
 
போர்க்கப்பல்கள் அனைத்தும் வெற்றிவாகை சூடுவதில்லை.. கடலில் இறங்கி யுத்தத்துக்கு தயாராகுவதற்கு முன்னரே தரைமட்டமான கப்பல்களின் கதைகளும் இங்குண்டு. ஆனால் பல்வேறு யுத்தங்களில் பங்கேற்றதோடு.. வரலாறுகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்து கப்பல்களில் மிக வெற்றிகரமான கப்பலாகவும் இது திகழ்ந்தது!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்