Paristamil Navigation Paristamil advert login

வருண் சக்கரவர்த்தி சுழலில் சிக்கிய நியூசிலாந்து- 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

வருண் சக்கரவர்த்தி சுழலில் சிக்கிய நியூசிலாந்து- 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

3 பங்குனி 2025 திங்கள் 08:55 | பார்வைகள் : 130


சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற லீக் போட்டியின் கடைசி ஆட்டத்தில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதின.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது.

இதனால் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 249 ஓட்டங்கள் எடுத்தது.

இந்திய அணியில் ஸ்ரேயஸ் ஐயர் அதிகபட்சமாக 79 ஓட்டங்கள் எடுத்தார். பந்துவீச்சில் நியூசிலாந்து அணியின் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

250 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரச்சின் ரவீந்திரா 6 ஓட்டங்களிலும், வில் யங் 22 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

அரைசதம் கடந்த கேன் வில்லியம்சன் 81 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதனால், இந்திய அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணியின் பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி குரூப் ஏ பிரிவில் முதலிடத்தை பிடித்ததுடன் இந்திய அணி வரும் 4ஆம் திகதி துபாயில் நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

தோல்வியடைந்த நியூசிலாந்து அணி வரும் 5ஆம் திகதி நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்