Paristamil Navigation Paristamil advert login

”உத்தரவாதமில்லாத விலை கொடுக்க தயாரில்லை” - ஜனாதிபதி மக்ரோன்..!!

”உத்தரவாதமில்லாத விலை கொடுக்க தயாரில்லை” - ஜனாதிபதி மக்ரோன்..!!

3 பங்குனி 2025 திங்கள் 09:05 | பார்வைகள் : 1179


”என்ன விலைகொடுத்தாவது உக்ரேனில் அமைதியை ஏற்படுத்த விரும்புகிறோம்! ஆனால் உத்தரவாதில்லாத விலை கொடுக்க தயாரில்லை” என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

நேற்று மார்ச் 2, லண்டனில் இடம்பெற்ற ஐரோப்பிய பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி மக்ரோன், மாநாடு நிறைவடைந்ததும் வழங்கிய செவ்வி ஒன்றில் இதனைக் குறிப்பிட்டார். ”பிரான்சும் பிரித்தானியாவும் இணைந்து ரஷ்யா-உக்ரேனிடையேயான தரைவழிச் சண்டையை -  ஒருமாத கால போர்நிறுத்தம் ஒன்றினை முன் மொழிகின்றன” என ஜனாதிபதி மக்ரோன் உறுதியளித்தார். 

“போர் நிறுத்தம் ஏற்பட்டால் முன்னணியில் நடக்கும் சண்டை மதிக்கப்படுகிறதா என்பதை சரிபார்ப்பது மிகவும் கடினமாக இருக்கும்.  முன் வரிசை என்பது பரிசுக்கு புட்டாபெஸ்ட்டுக்கும் (ஹங்கேரிய தலைநகர். தூரத்தைக் குறிப்பிடுவதற்காக தெரிவித்த உதாரணமாகும்) இடையேயான தூரமாகும்” என மக்ரோன் குறிப்பிட்டார்.

“என்ன விலை கொடுத்தேனும் உக்ரேனில் அமைதியை ஏற்படுத்த விரும்புகிறோம். ஆனால் உத்தரவாதமில்லாத விலையிலை கொடுக்க தயாராக இல்லை!” என அவர் குறிப்பிட்டார். மூன்று நாட்களுக்கு முன்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் விளாதிமிர் செலன்ஸ்கி இருவருக்கிடையே இடம்பெற்ற சந்திப்பு வாக்குவாதத்தில் சென்று முடிவடைந்தது. கனிமவள ஒப்பந்தத்தில் செலன்ஸி கையெழுத்திட மறுத்திருந்தார். 

அது குறித்தே ஜனாதிபதி மக்ரோன் “உத்தரவாதமில்லாத விலை” என குறிப்பிட்டார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்