பிரான்சில் இருந்து 100 பேர் அவசர வெளியேற்றம் ! - உள்துறை அமைச்சர் உறுதி!!

3 பங்குனி 2025 திங்கள் 11:00 | பார்வைகள் : 2320
பிரான்ஸ்-அல்ஜீரியா இடையே இராஜதந்திர முறுகல் நிலை ஏற்பட்டுள்ளமை அறிந்ததே. அல்ஜீரியா அகதிகளுக்கு வதிவிட உரிமை அல்லது விசா வழங்குவதை பிரான்ஸ் நித்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், பிரான்சில் இருந்து 100 அல்ஜீரியர்கள் விரைவில் நாடு கடத்தப்பட உள்ளதாக உள்துறை அமைச்சர் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அல்ஜீரியர்களே இவ்வாறு விரைவில் திருப்பி அனுப்பப்பட உள்ளனர்.
“ஆபத்தானவர்கள் என அடையாளம் காணப்பட்ட 100 பேர் கொண்ட பட்டியலை உருவாக்கியுள்ளோம். அவர்கள் அனைவரும் வெவ்வேறு விதமான ஆபத்தான தன்மைகள் கொண்டவர்கள். அவர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்கள்!” என உள்துறமை அமைச்சர் Bruno Retailleau குறிப்பிட்டார்.
சில நாட்கள் முன்பாக Mulhouse நகரில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டும், இருவர் காயமடைந்தும் இருந்ததனர். இந்த தாக்குதலை மேற்கொண்டது அல்ஜீரியாவைச் சேர்ந்த ஒரு பயங்கரவாதி என்பது குறிப்பிடத்தக்கது.