அமெரிக்காவி ல் பறவையுடன் மோதியதில் தீப்பற்றிய FedEx விமானம்

3 பங்குனி 2025 திங்கள் 10:08 | பார்வைகள் : 408
அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி (New Jersey) மாநிலத்தின் நியூவர்க் (Newark) நகரிலிருந்து விமானம் புறப்பட்டபோது பறவையுடன் மோதியதில் விமானம் தீப்பற்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் முதலாம திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்திஒல் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படவில்லை.
விமானம் நியூவர்க் liberty அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானம் புறப்படும்போது அது பறவையுடன் மோதியதால் போயிங் 767 ரக விமானத்தின் இயந்திரம் சேதமடைந்தது. விமானம் இண்டியானாபொலிஸ் (Indianapolis) நகருக்குச் செல்ல வேண்டியிருந்தது.
எனினும் இந்த அசம்பாவைத்ததால் விமானம் புறப்பட்ட விமான நிலையத்திற்கே திரும்பியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சம்பவம் நேர்ந்தவுடன் ஆகாயப் போக்குவரத்து சற்று நேரம் நிறுத்தப்பட்டதாகப் 2தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் சிறிது நேரம் கழித்துச் செயல்பாடுகள் வழக்கநிலைக்குத் திரும்பியதாகவும் கூறப்படுகின்றது.