முகமட் அம்ரா : மேலும் 8 பேர் கைது!!

3 பங்குனி 2025 திங்கள் 14:00 | பார்வைகள் : 1069
போதைப்பொருள் கடத்தல் மன்னன் முகமட் அம்ரா கைது செய்யப்பட்டதை அடுத்து, அவருடன் தொடர்புடைய பலர் இதுவரை கைது செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மார்ச் 3, திங்கட்கிழமை இன்று காலை அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் இருவர் 18 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
முகமட் அம்ரா பிரான்சில் நன்கு அறியப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரனாவார். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், சென்ற வருடம் மே மாதத்தில் தப்பிச் சென்றிருந்தார். பின்னர் அவர் பெப்ரவரி 22 ஆம் திகதி ருமேனியாவில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
அதை அடுத்து, 20 பேருக்கும் அதிகமானோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டிருந்தனர். தற்போது மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், முன்னதாக பெப்ரவரி 27 ஆம் திகதி வியாழக்கிழமை 11 பேர் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.