இல்-து-பிரான்ஸ் : வளிமண்டல மாசடைவு எச்சரிக்கை!!

3 பங்குனி 2025 திங்கள் 14:34 | பார்வைகள் : 2468
மார்ச் 4, நாளை செவ்வாய்க்கிழமை அதிகூடிய வளிமண்டல மாசடைவு காரணமாம இல்-து-பிரான்சுக்குள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலம் மிகவும் மோசமடைந்து காணப்படும் எனவும், நடைபயிற்சி, ஓட்டம் போன்ற உடற்பயிற்சிகளில் ஈடுபடுபவதை தவிர்க்கும் படியும், முடிந்தவரை பொது போக்குவரத்துக்களில் பயணிக்கவும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
வளிமண்டல அவதானிப்பாளர்களான Airparif நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதேவேளை, வீதிகளுக்கு வேகக்கட்டுப்பாடும் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.