Gérard Collomb - உள்துறை அமைச்சர்! - சிறு அறிமுகம்!!
18 ஆடி 2017 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 18012
தற்போதைய உள்துறை அமைச்சர் Gérard Collomb என்பது உங்களுக்குத் தெரியும். இவர் எங்கிருந்து வந்தார்?! இவர் குறித்த சுருக்கமான அறிமுகம் இன்றைய பிரெஞ்சு புதினத்தில் பார்க்கலாம்!!
ஜூன் மாதம் 20 ஆம் திகதி 1947 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு, கடந்த மாதத்துடன் 70 வயதானது. Chalon-sur-Saône இல் பிறந்த இவர், படிப்புக்காக லியோன் நகருக்குச் சென்றார். லியோன் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியை நிறைவு செய்த கையோடு, சோசலிச கட்சியில் இணைந்தார்.
சோசலிச கட்சி சார்பாக லியோனின் 9 ஆம் வட்டார கவுன்சிலராக 1977 ஆம் அண்டு தேர்வானார். இப்படி இலகுவாக சொல்லிவிட்டாலும், அதற்கு முந்தைய 6 தேர்தல்களில் போட்டியிட்டு, தோல்வியையும் சந்தித்திருந்தார்.
பின்னர், 1981 இல், இவரின் 34 ஆவது வயதில் தேசிய பாராளுமன்ற உறுப்பினராக ஆனார். 1999 ஆம் ஆண்டில் Rhône-Alpes பிராந்திய கவுன்சிலர் ஆனார்.
அதன் பின்னர் , 2001 ஆம் ஆண்டு லியோன் நகர முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 2008 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் நகர முதல்வர் பதவிக்கு போட்டியிட்டார். ஆனால் அது நடக்கவில்லை.
இது இப்படியிருக்க, 2008 ஆம் ஆண்டில் 'L'espoir à gauche, fier(e)s d'être socialistes' என ஒரு அறிக்கையை விட்டார். அதாவது தாம் சோசலிச கட்சியில் இருப்பது பெருமையான ஒன்றாகும் என தெரிவித்தவர், 2017 ஆம் ஆண்டு, அதே கட்சியில் இருந்துகொண்டு, En Marche கட்சி ஜனாதிபதி வேட்பாளர் இம்மானுவல் மக்ரோனுக்கு ஆதரவு தெரிவித்தார்.
பின்னர், பிரதமர் எத்துவா பிலிப் தலைமையிலான அரசில் உள்துறை அமைச்சராக பதவியேற்றார்.