பாலியல் தொழில் கொடிகட்டிப் பறக்கும் மசாஜ் நிலையங்கள்! - ஆபத்து!!

3 பங்குனி 2025 திங்கள் 17:03 | பார்வைகள் : 1930
பரிசில் உள்ள பல மசாஜ் நிலையங்களில் சட்டவிரோதமாக பாலியல் தொழில் கொடிகட்டிப்பறப்பதாகவும், விரைவில் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில மசாஜ் நிலையங்களில் சட்டவிரோத பாலியல் தொழில் நடப்பதாகவும், சில பாலியல் தொழில் நிலையங்கள் மசாஜ் நிலையம் எனும் பெயரில் இயங்குவதாகவும், இவ்வாறாக 426 நிலையங்கள் மொத்தமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
”அவ்வகை நிலையங்கள் 100% சதவீதம் மசாஜ் நிலையங்கள் போன்று காட்சியளிக்கின்றன!” என தெரிவித்த அமைச்சர் Aurore Bergé , அதுபோன்ற நிலையங்கள் விரைவில் மூடப்படும் எனவும் தெரிவித்தார்.