Paristamil Navigation Paristamil advert login

டில்லியில் இரு கோஷ்டிகள் இடையே துப்பாக்கிச்சூடு!

டில்லியில் இரு கோஷ்டிகள் இடையே துப்பாக்கிச்சூடு!

4 பங்குனி 2025 செவ்வாய் 03:15 | பார்வைகள் : 130


தலைநகர் டில்லியில் இரு கோஷ்டிகள் சரமாரியாக ஒருவருக்கொருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜோதி நகர் பகுதியில் உள்ள ஒருவர் தமது மகனை சிலர் துப்பாக்கியால் சுட்டுவிட்டதாக போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த போலீசார், உடனடியாக சம்பவ பகுதிக்குச் சென்றுள்ளனர்.

அங்கு இரு கோஷ்டிகள் இடையே மோதல் மூண்டு துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதும் சிலர் காயம் அடைந்திருப்பதையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து, அவர்கள் தடயவியல் துறையினருக்கு தகவல் தெரிவித்து காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்திய கோஷ்டிகள் யார் என்று விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இதுகுறித்து துணை கமிஷனர் அபிஷேக் மிஸ்ரா கூறியதாவது; இந்த சம்பவத்தில் 5 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜோதி நகர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக சில துப்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

சம்பவ பகுதியில் விசாரணையில் இறங்கி உள்ள போலீசார் அங்கு இருக்கும் சி.சி.டி.வி., கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். கூடுதல் போலீசார் களமிறக்கப்பட்டு கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்