கனடாவின் மிதமான நிலநடுக்கம்!
4 பங்குனி 2025 செவ்வாய் 08:44 | பார்வைகள் : 3490
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் திங்கட்கிழமை அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
வான்கூவர் தீவுக்கும், வாஷிங்டன் மாநிலத்திற்கும் இடையில் அதிகாலை 5:02 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இது முதலில் 4.6 ரிக்டர் அளவிலாக பதிவு செய்யப்பட்டது, பின்னர் 4.1 ஆக திருத்தப்பட்டது.
விக்டோரியா, வாங்கூவர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் மக்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்தனர்.
இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை எனவும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த பெப்ரவரி மாதம் 13 மற்றும் 21ம் திகதிகளிலும் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்படுவதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


























Bons Plans
Annuaire
Scan