Paristamil Navigation Paristamil advert login

உக்ரைனிற்கான இராணுவ உதவிகளை நிறுத்தும் அமெரிக்கா…!

உக்ரைனிற்கான இராணுவ உதவிகளை நிறுத்தும் அமெரிக்கா…!

4 பங்குனி 2025 செவ்வாய் 09:56 | பார்வைகள் : 231


உக்ரைனிற்கான இராணுவ உதவிகளை இடைநிறுத்துவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் உக்ரைனிற்கான இராணுவ உதவியை இடைநிறுத்துகின்றோம் எங்களின் உதவி தீர்விற்கு உதவுகின்றதா என்ற மீளாய்வில் ஈடுபட்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் , உக்ரைன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கி  வெள்ளை மாளிகையில் மோதிக்கொண்டதின் சமீபத்தைய விளைவு இது என சிபிஎஸ் நியுஸ் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி சமாதானம் குறித்து தான் கவனம் செலுத்தவேண்டும் என்பது குறித்து உறுதியாகவுள்ளார், என சிபிஎஸ் நியுசிற்கு தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை அதிகாரியொருவர் எங்கள் சகாக்களும் அந்த இலக்கு குறித்து தங்களை அர்ப்பணிக்கவேண்டும்,என குறிப்பிட்டுள்ளார்.

மூன்று வருடத்திற்கு முன்னர் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரைனிற்கு எதிரான போரை ஆரம்பித்தவேளை அதனை உக்ரைன் எதிர்கொண்டு ரஸ்யாவின் ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்காவின் ஆயுதங்களே பெருமளவிற்கு உதவின.

எனினும் டிரம்பின் மீள்வருகை அமெரிக்காவின் கொள்கையில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளதுடன் அவர் யுத்தத்தை உக்ரைனே ஆரம்பித்தது எனவும் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்