Paristamil Navigation Paristamil advert login

சித்திரவதை முகாம் நினைவில் மக்ரோன்!!

சித்திரவதை முகாம் நினைவில் மக்ரோன்!!

27 தை 2025 திங்கள் 09:19 | பார்வைகள் : 3595


கிட்லரின் சித்திரவதை மற்றும் தடுப்பு முகாம்களில் மிகவும் கொடூரமானதும் பல இலட்சம் உயிர்களைப் பலிவாங்கியதுமான அவுஸ்விட்ஸ் (Auschwitz-Birkenau) முகாம் நேசப்படைகளினால் விடுவிக்கப்பட்டு இன்று 80 வருடங்கள் ஆகின்றன.

இந்த நினைவு நாள் உலகமெங்கும் நினைவுகூரப்படுகின்றது. தென் ஒரு கட்டமாக இன்று பிரான்சின் ஜனாதிபதி எமானுவல் மக்ரோனும் இந்த நினைவுகூரலை மேற்கொண்டுள்ளார்.

பரிசிலுள்ள கிட்லரின் யூத இனப்படுகொலையான Saho நினைவிடத்தில் மக்ரோன் இந்த நினைவுகூரலை நடாத்துகின்றார்.

இதில் இந்த படுகொலை முகாமிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ள 50 பேரும் கலந்து கொள்ள உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்