Paristamil Navigation Paristamil advert login

 சுவிட்சர்லாந்தில் அமுலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள் 

 சுவிட்சர்லாந்தில் அமுலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள் 

27 தை 2025 திங்கள் 10:37 | பார்வைகள் : 2778


சுவிட்சர்லாந்தில்  பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி முதல், சில முக்கிய மாற்றங்கள் அமுலுக்கு வரவுள்ளது.

பெப்ரவரி மாத ஆரம்ப முதல், பிறந்து 15 வாரங்கள் ஆகாத நாய்க்குட்டிகளை வியாபார நோக்கில் சுவிட்சர்லாந்துக்கு இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுகிறது.

பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி முதல், விருந்தோம்பல் துறையில் பணி புரிவோருக்கான குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கப்பட உள்ளது.

தொழிற்பயிற்சி பெறாத பணியாளர்களுக்கான ஊதியம் 3666 சுவிஸ் ஃப்ராங்குகளிலிருந்து மாதம் ஒன்றிற்கு 3706 சுவிஸ் ஃப்ராங்குகளாக உயர இருக்கிறது.


முறைப்படி ஃபெடரல் சான்றிதழ் பெற்றவர்களுக்கான ஊதியம் 4470 சுவிஸ் ஃப்ராங்குகளிலிருந்து 4519 சுவிஸ் ஃப்ராங்குகளாக உயர இருக்கிறது.

சுவிஸ் சர்வதேச விமான நிறுவனமான Swiss நிறுவனம், பிப்ரவரி மாதம் 1ஆம் திகதி முதல், மீண்டும் டெல் அவிவ் நகருக்கு விமான சேவையை துவங்க இருக்கிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்