Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் 12 தீவிபத்து - மேலதிக விபரங்கள்!!

பரிஸ் 12 தீவிபத்து - மேலதிக விபரங்கள்!!

27 தை 2025 திங்கள் 10:37 | பார்வைகள் : 4828


இன்று பரிஸ் 12 இன் நகரசபையின் தீ விபத்து வாசகர்கள் அறிந்த விடயம். இதன் மேலதிக விபரங்கள் தற்போது கிடைத்துள்ளன.

இந்தத் தீயினை அணைக்க 153 தீயணைப்புப் படையினர் 60 தீயணைப்பு வாகனங்களுடன் போராடி உள்ளனர். காலை 7 மணியளவில் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

தீப்பிழம்பினால் பாதிக்கப்பட்ட மணிக்கூண்டு இடிந்துவிழும் அபாயத்தில் உள்ளது.

பரிஸ் 12 இலுள்ள அவெனியூ துமெனில் (avenue Daumesnil) இலுள்ள இந்த நகரசபை மண்டபத்தின் கட்டத்தின் முகப்பிற்கு மேலே அதன் கோபுர மட்டத்திலேயே தீ ஆரம்பித்துள்ளது.

அதிகாலை 3 மணிக்குப் பற்றிக்கொண்ட தீயை அடுத்து உடனடியாக தீயணைப்புப் படைவீரர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.


சம்பவ இடத்திற்கு காலை 6 மணியளவில் விரைந்த பரிசின் காவற்துறைத் தலைவர் லொரோன் நூனெஸ் (Laurent Nunez) கூரைப்பகுதியிலேயே தீப்பிடிக்க ஆரம்பித்தது எனவும், இந்தத் தீவிபத்தில் எந்த உயிர்ச்சேதமும் நடக்கவில்லை எனவும் உறுதியளித்தார்.

அந்தச் சமயத்தில் காவற்கடைமையில் இருந்த கார்டியன் மற்றும் அவர் உதவியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டிருந்தனர்.


 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்