Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : தன்னைத்தானே தீ வைத்த ஒருவர் பலி!!

பரிஸ் : தன்னைத்தானே தீ வைத்த ஒருவர் பலி!!

27 தை 2025 திங்கள் 13:07 | பார்வைகள் : 3222


பரிசில் நபர் ஒருவர் தன்னைத்தானே தீவைத்து எரிந்து உயிரிழந்துள்ளார்.

பரிஸ் 10 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இன்று ஜனவரி 27, திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. rue Martel வீதியில் உள்ள ”Domnis சமூக வீட்டுத்திட்ட” ( bailleur social Domnis) அலுவலகத்தின் முன்பாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சமூக வீட்டுத்திட்டத்தில் உள்ள வீடொன்றில் வசிக்கும் 60 வயதுடைய ஒருவர், இன்று காலை அங்கு வருகை தந்துள்ளதுடன், அலுவலகத்தின் முன்பாக தன் மீது பெற்றோலை ஊற்றி தீ வைத்து எரியூட்டியுள்ளார்.

தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். ஆனாலும் நிலமை கைமீறிச் சென்றுள்ளது. குறித்த நபர் சில நிமிடங்களிலேயே பலியாகியுள்ளார். அவர் கடந்த சில வருடங்களாக அவரது வீட்டினை மாற்றிக்கொள்வதற்காக பல தடவைகள் அங்கு வந்து சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Domnis நிறுவனத்தின் பெயரில் இல் து பிரான்ஸ் மாகாணத்துக்குள் 13,000 வீடுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்