Paristamil Navigation Paristamil advert login

பாசிப்பருப்பு பாயாசம்

பாசிப்பருப்பு பாயாசம்

27 தை 2025 திங்கள் 14:03 | பார்வைகள் : 435


ஜவ்வரிசி பாயாசம், சேமியா பாயாசம் வழக்கமாக செய்யும் பாயாசங்கள். ஆனால் பாசிப்பருப்பால் செய்யப்படும் இந்த பாயாசம் வித்தியாசமான சுவையுடன் இருக்கும். இதனை  பத்தே நிமிடத்தில் செய்து படைக்கலாம். இது உடல்நலத்திற்கும் நல்லது.

தேவையான பொருட்கள்

பாசி பருப்பு - ஒரு கப்

பச்சரிசி - கால் கப்

வெல்லம் - அரை கப்

நெய் - 2 ஸ்பூன்

முந்திரி திராட்சை - கால் கப்

செய்முறை

முதலில் பாசி பருப்பை கடாயில் வறுத்துக்கொள்ளவும். அதை குக்கரில் 4 விசில் வரும் வரை வேக விடவும்.

பின்னர் சிறிது பச்சரிசியை கால் கப் தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.

அப்போதே வெல்லத்தையும்  உருக்கிக் கொள்ளுங்கள்.

பாசி பருப்பு வெந்ததும் அதில் பச்சரிசி தண்ணீரை ஊற்றி கிளறவும். உருக்கிய வெல்லத்தையும் சேர்த்து கலக்கவும். இந்த 2 கலவையையும் கெட்டியான பதம் வரும் வரை நன்றாக கொதிக்க விடவும்.

இறுதியாக நெய் விட்டு அதில் முந்திரி சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். அது நன்றாக பொரிந்து வந்ததும்  பாயாசத்தில் ஊற்றிக் கிளறவும். பாசி பருப்பு பாயாசம் ரெடி.

குறிப்பு: தேவைப்பட்டால் காய்ச்சிய பாலை ஊற்றிக்கொள்ளலாம். நல்ல ருசியாக இருகும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்