விஜயின் ஜனநாயகன் அரசியல் படமா..?

27 தை 2025 திங்கள் 14:08 | பார்வைகள் : 3913
எச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிக்கும் படத்துக்கு ஜனநாயகன் என்ற தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனது 69வது படமான ஜனநாயகனுடன் சினிமாவுக்கு முழுக்கு போட்டு, முழு நேர அரசியலில் இறங்கப்போகிறார் விஜய். இதனால், இந்த படம் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பை பார்த்தால் அரசியல் படம் மாதிரி தெரிகிறதே? எச்.வினோத் பாணி வேறு மாதிரியாச்சே? இது எப்படிப்பட்ட படம் என்று படக்குழுவிடம் கேட்டால் ‘‘ முதலில் இது பக்கா கமர்ஷியல் கதை. பர்ஸ்ட் லுக்கை பார்க்கும்போது கதையில் அரசியல் இருப்பதாகவே தெரிகிறது. ஆனாலும் ஒரு போட்டோவை வைத்து கதையை முடிவு செய்ய முடியாது. இன்னும் சிலர், தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் அல்லது சாயல் என்கிறார்கள். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அந்த படத்தை பலரும் பார்த்திருக்க வாய்த்திருக்கும்.அதனால், தனது கடைசி படத்தை ரீமேக் ஆக எடுத்து, ரிஸ்க் இறங்க விஜய் முயற்சிக்க மாட்டார். பல மாதங்கள் கதையை செப்பனிட்டு இந்த படத்தை தொடங்கியுள்ளார் எச்.வினோத். முன்பு ஒரு பேட்டியிலும் இது அரசியல் படமல்ல என்று தெளிவாக கூறிவிட்டார். தவிர, அவர் ரீமேக்கில் ஆர்வம் காண்பிக்க மாட்டார்’’ என்கிறார்கள்.
அதேசமயம், படத்தின் 2வது லுக், எம்ஜிஆரின் நான் ஆணையிட்டால் பாடலை நினைவுப்படுத்துகிறது. அதனால், எம்ஜிஆர் டச், அல்லது அந்த பட ரீமிக்ஸ் பாடல் இருக்கலாம். அது விஜயின் அரசியல் பயணத்துக்கு பலமாக இருக்கும் ’ என்றும் கூறப்படுகிறது.
ஒருவேளை ஜனநாயகன் அரசியல் படமாக இருந்தால், அந்த பட ரிலீஸ் சமயத்தில் கண்டிப்பாக பிரச்னை ஏற்படும். ஆளுங்கட்சி, மத்திய அரசு மூலமாக படத்துக்கு நெருக்கடி ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதனால்தான், படத்தை வெளிமாநிலத்தை சேர்ந்தத தயாரிப்பாளருக்கு விஜய் கொடுத்துள்ளார். இங்குள்ள தயாரிப்பாளர் என்றால் அரசியல் பிரஷருக்கு ஆளாகி, வேறு தொல்லைகளுக்கு ஆளாகலாம். மறைமுக மிரட்டலுக்கு பணிந்து போகலாம்.
ஆகவேதான், பக்கத்து மாநில படக்கம்பெனிக்கு விஜய் கால்ஷீட் கொடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. அனேகமாக, இந்த ஆண்டு தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆக வாய்ப்பு. அதற்கு முன்பே பட வேலைகளை முடித்துவிட்டு, தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்யப்போகிறார் விஜய். அவரின் கடைசி படம் என்பதால், படத்தை பார்க்க பலரும் ஆசைப்படுவார்கள். அதனால், கமர்ஷியலாக படம் தோற்காது என்று சொல்லப்படுகிறது. ஜனநாயகன் என்பது பக்கா தமிழ் தலைப்பு என்பதால், தெலுங்கில், இந்தியில் மற்ற மொழிகளில் படத்தை டப் செய்தால் அங்கே உள்ள நிலவரத்துக்கு தக்கப்படி தலைப்பை மாற்றவும் படக்குழு முடிவு செய்து இருக்கிறதாம்.
கடைசி படம் என்பதால் விஜய் சொந்தக்குரலில் ஒரு பாடலை பாடியும், தனது திரையுலக வாழ்க்கையை நிறைவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1